top of page

மொழி உரிமைகளும் முரண்பாடுகளும்: ஜோ லோ பியான்கோ உடனான நேர்காணல்

உங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் பணியைப் பற்றிப் பொதுவாக விவரிக்க முடியுமா?

என் பெயர் ஜோ லோ பியான்கோ. நான் 2004 முதல் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மொழி மற்றும் கற்றல் கல்வித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கிறேன். லேங்குவேஜ் ஆஸ்திரேலியா என்கிற மொழி ஆராய்ச்சி மையங்களுக்கான தேசிய நெட்வொர்க்கில் இயக்குனராக இருந்தேன். அதற்கு முன்பாக, 1970களின் இடைப்பகுதி முதல் பிற்பகுதி வரையில் பன்முகக் கலாச்சாரம், மொழி உரிமைகள், மொழிக் கல்வி ஆகியவற்றில் கொள்கை மற்றும் சமூகச் செயற்பாடுகளில் பணியாற்றி வந்தேன். ஆசிரியராக, ஒன்றிய அதிகாரியாக, சமூக மேம்பாட்டு அதிகாரியாக, பொது ஆராய்ச்சியாளராக, எழுத்தாளராக, பொது மக்களுக்கான கொள்கை அதிகாரியாக, கல்வியாளராகப் பணியாற்றி இருக்கிறேன். 1987 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் முதல் பன்மொழிக் கொள்கையாக மொழிகளுக்கான தேசியக் கொள்கை செயல்படுத்தப்பட்டது முதல், பன்மொழியியலுக்கான மொழிக் கொள்கைகளை எழுத உதவும்படி ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச நாடுகள் பலவற்றில் இருந்தும் எண்ணற்ற அழைப்புகளைப் பெற்றேன். இதன் அடிப்படையில் தென் பசிபிக், தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஐரோப்பா, தெற்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் உலகெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளில் அரசாங்கங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் ஐநா நிறுவனங்களில் ‘மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல்' தொடர்பாக இப்போது வரை கடந்த முப்பது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன்.


நீங்கள் ஆராய்ச்சி நடத்திய இடங்கள் சிலவற்றைப் பற்றியும் அங்கு நீங்கள் எதிர்கொண்ட முரண்பாடுகள் மற்றும் மொழி உரிமைகள் பிரச்சினைகள் பற்றியும் எங்களுக்குக் கூற முடியுமா?

தென் பசிபிக்கில் சமோவா, டொங்கா, வனுவாடு, பபுவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் ஆகிய பகுதிகளில் உள்ளூர் மொழிகள் இருமொழிக் கல்வியில் ஈடுபட்டுள்ளேன் மற்றும் கிரியோல் பேசுபவர்களுக்கான உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துள்ளேன். ஹவாய் உள்ளிட்ட நாடுகளில் பேரழிவு எச்சரிக்கை மற்றும் மேலாண்மையில் மொழி சார்ந்த சில பணிகளை மேற்கொண்டேன். மொழி உரிமைகள் பிரச்சனைகளில் கலாச்சார மாற்றத்தின் ஆழத்தையும் வேகத்தையும் கட்டுப்படுத்த தகுந்த சமூகங்களை உருவாக்குவதில் / மீளுருவாக்குவதில் மக்களின் திறனும் உள்ளடங்கும், பொதுவாக சிறிய அளவில் இருக்கும் தேசியப் பொருளாதாரங்கள் வளங்களைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் இறையாண்மையை எதிர்காலத் தலைமுறையினருக்கு நிலைநிறுத்துவதைக் கேள்விக் குறியாக்குகின்றன, சமீபகாலங்களில் பல சமூகங்கள் அரசியல் கட்டமைப்பு மூலம் இதை அடைந்தும் இருக்கின்றன. மொழி என்பது இதனுடன் எப்போதும் இணைக்கப்பட்டிருக்கிறது, எப்போதும் மையமாக இல்லாவிட்டாலும் அடிக்கடி இவ்வாறு அமைகிறது.

நான் சமீப காலமாகப் பணியாற்றி வரும் மியான்மரில், கல்வி மற்றும் கலாச்சாரக் கட்டமைப்பை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அங்கீகரிக்கப்பட்ட இனக்குழுக்களில் கோரிக்கைகளுடன் மொழிப் பிரச்சினைகளும் தொடர்புடையவையாக இருக்கின்றன. நாடெங்கிலும் இது பெருமளவு வேறுபட்டாலும், பெரும்பான்மையாக இருக்கும் பாமர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேச அதிகாரங்களுக்கு இடையே பல்வேறு போர்களும் தொடர் பதற்றங்களும் நிலவிவருகின்றன. நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் பன்மொழிக் கோரிக்கைகளுக்கு உள்ளூர் தீர்வுகளைக் கண்டறியவும், இவற்றை தேசியக் கொள்கையோடு இணைக்கும் நோக்கிலும் 45 கட்டாய மாநாடுகளை நடத்துவதில் ஈடுபட்டிருந்தேன். மூன்று மாநில சட்டங்களையும் ஒரு தேசிய வரைவையும் முன்மொழிவதற்கான அனைத்துத் தரப்புக்கும் ஏற்ற அணுகுமுறையை வரைவுபடுத்தினோம், ஆனால் பிப்ரவரி 2022 இல் ஜனாநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் ஏவப்பட்ட வன்முறையில் கடந்த பத்தாண்டுகளில் அடைந்த மன ஒற்றுமை நிலைக்கவில்லை. சிறுபான்மையினரின் கவலைகளில் அடிக்கடி மொழிசார்ந்த கோரிக்கைகள் எழுகின்றன; அதிகாரத்தில் இருக்கும் பெரும்பான்மைக் குழுக்கள் கோரிக்கைகளை நிராகரிப்பதை அவர்களது போக்காகக் கொண்டிருக்கின்றனர், இதனாலேயே அதிகாரப்பூர்வ சமாதான முயற்சிகளுக்கும் அதே நிலைமை தான் ஏற்பட்டது, கடந்த பத்தாண்டுகளில் ஜனநாயகத்தின் கீழ் இருந்த பாதியளவு ஜனநாயக மாற்றத்தின் கீழும் கூட, மொழிப் பிரச்சினைகளுக்கு அதிகக் கவனம் செலுத்தவில்லை.

நான் இலங்கையிலும் பணியாற்றி இருக்கிறேன், அங்கும் முரண்பாடுகள் மொழிக் கோரிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டிருந்தன. 1956 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு மொழிச் சட்டமே தீர்க்கப்படாத சமூகங்களுக்கு இடையேயான பதற்றங்கள் பல ஆண்டுகளாக நேரடி முரண்பாடுகளுக்கும் வன்முறை நிறைந்த உள்நாட்டுப் போருக்கும் காரணமாக மாறின. 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பல்வேறு திட்டங்களில் இலங்கையில் பணிபுரிந்தேன், அதில் ‘ஸ்வபாஷா கல்வி’ என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டமும் அடங்கும் (சிங்கள வழிப் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதும், தமிழ் வழிப் பள்ளிகளில் சிங்களம் கற்பிப்பதும் அத்திட்ட நோக்கங்களாகும், அதோடு மும்மொழிக் கல்விக்கான வரைவிலும் பணியாற்றினேன்). கல்விக்கான தேசிய நிறுவனத்தில் பணிபுரிந்ததோடு, சமூகக் குழுக்கள் மற்றும் என்ஜிஓக்களுக்கான பல சிறிய ஆணையங்களிலும் இடம்பெற்றிருந்தேன். மொழிப் பிரச்சினைகள் சிறுபான்மையினரின் தொடர் கவலையாகவே இருந்து வருகின்றன, அதிலும் சட்டரீதியான மாற்றங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதிபலித்து வருகின்றன (இலங்கைத் தமிழ் தேசியவாதிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே 1980களின் பிற்பகுதியில் 2 ஆண்டுகளுக்கு இந்திய அமைதிப் படை அரசியல் சாசனத்தில் மீண்டும் ஆங்கிலம் அறிமுகம் செய்வதாக இந்தியா சமாதான முயற்சி மேற்கொண்டது). இலங்கையின் உள்நாட்டு வாழ்க்கையில் கல்வி, சுகாதாரம், சமூக உறவுகள், நிர்வாகம் ஆகியவற்றில் மொழிப் பிரச்சினைகள் பெரும்பங்கு வகிக்கின்றன, இதில் இருக்கும் பெரிய கேள்வி தழிழர்களுக்கு எந்தளவுக்கு என்ன வகையான அங்கீகாரம் அளிப்பது என்பது தான், இதோடு பல பிற மொழிப் பிரச்சனைகளும் உள்ளன.

தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளிலும் எனது பணிகளையும் சமூக ஈடுபாட்டையும் மேற்கொண்டுள்ளேன். நான் தெற்கு தாய்லாந்தை மட்டுமே இங்கே பேசுகிறேன், மூன்று தாய்லாந்து பகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள பட்டாணி மலாய் மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் பல ஆண்டுகளாக தங்கள் மொழிக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி வன்முறை சார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அது இதை விட மிகவும் சிக்கலான ஒன்று, எழுத்து மற்றும் பிற மொழிகள் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடக்கியது, ஆனால் பொதுவாக கல்வி, பொது மேலாண்மை போன்றவற்றில் சிறுபான்மை மொழி உரிமைகள் அதிகமாகத் தாக்கப்படுகின்றன. சிறுபான்மை போராளிகளால் முழுதாகப் புரிந்துகொள்ளப்படாமல் தேசியக் கல்வியில் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த பல ஆசிரியர்கள் கொல்லப்பட்டதே இதற்கான ஆதாரம்.

இதில் எனது பங்கு ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பங்களிப்பு இரண்டிலும் இருந்தது. முன்னெடுத்துச் செல்லும் பேச்சுவார்த்தை என்கிற கொள்கை எழுத்து முறையைப் பின்பற்றினேன், மொழிக் கொள்கையை எழுதுவதில் இது வழக்கத்துக்கு மாறானது என்றே கருதுகிறேன். இதை முறையாகச் செய்ய வேண்டிய கட்டமைப்பு இருந்தபோது, ஜனநாயகம் சார்ந்த வடிவத்தைப் பெற்றது, ஆனால் மொழி சார்ந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் நிபுணத்துவ அடிப்படையிலானதாக இருந்தது. தகவல் பரிமாற்ற யதார்த்தங்களைச் ‘சிக்கல்கள்’ என்று வரையறுக்கும் சமூகக் கட்டமைப்புகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி இருந்தாலும், புதிதாக உள்நாட்டில் பொருந்தக்கூடிய கொள்கை வடிவங்களை எழுதுவதற்கு முன்னெடுத்துச் செல்பவரால் எடுத்து நடத்தக்கூடிய முறைகள் மூலம் நீர்த்துப்போகச் செய்கின்றன. வழக்கமாக, அரசு அதிகாரிகள் தான் கொள்கை சார்ந்த அணுகுமுறை தேவைப்படும் மொழிப் பிரச்சினையை வரையறுக்கிறார்கள், இவை பெரும்பான்மைக் குழுக்களின் ஆதாயங்களுக்கே வழிவகுக்கின்றன, ஆனால் முன்னெடுத்துச் செல்லும் பேச்சுவார்த்தையில் இந்த வரம்புகளுக்குள்ளேயும் ‘புதிதாகத் தொடங்குவோம்’ என்கிற வகையில் முயற்சி செய்கிறோம். பேச்சுவார்த்தை என்பது பங்கேற்கும் குறிக்கோள்களின் அடிப்படையில் இருந்தாலும், இது இடம்பெறும் சூழ்நிலைகளால் முன்னெடுத்துச் செல்வது அவசியமாகிறது. அரசின் அதிகாரம், கொள்கைகள் மற்றும் நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்களால் வரம்பிடப்பட்டாலும், இந்த அமைப்புகளில் பணிபுரிய ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி பெற்றாலும், கல்வி அமைச்சர்கள் போன்ற அதிகாரங்களால் மதிப்பீடுகளுக்கும் மதிப்பாய்வுகளுக்கும் உட்படுத்தப்படும் நிலை உள்ளது. இதற்கு முன் தவறான ஏற்பாடுகள் நடைபெறாததுபோல் நாம் நடிக்கவும் முடியாது, அவற்றைப் பழைய நிலைக்கு மாற்றவும் முடியாது.


உங்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில், மொழி உரிமைகளைப் பாதுகாப்பது முரண்பாட்டைத் தடுத்து உயிர்களைக் காக்கும் என எண்ணுகிறீர்களா?

ஆம், மொழி உரிமைகளை மறுப்பது முரண்பாட்டை விளைவிக்கும். இது இரண்டு வழிகளில் நடக்கிறது என்று நினைக்கிறேன்: வேகமாக மற்றும் மெதுவாக செயல்படுதல். மெதுவாகச் செயல்படுவதால் வாய்ப்பு மறுப்பு அல்லது ஒடுக்கப்படுதல் தலைமுறைகளுக்கு இடையே உருவாகும். ஆதிக்க மொழிகளில் படிப்பறிவை உதாரணமாகக் கொள்ளலாம். பள்ளியில் படிப்பவர்களின் விகிதங்களைப் பார்த்தால் சிறுபான்மை மொழி மாணவர்கள் பள்ளியில் இருந்து ‘வெளியேற்றப்படுதல்’, குடும்ப வறுமையால் சூழப்படுதல், ஆதிக்கக் கல்வியமைப்பால் கண்டுகொள்ளப்படாமை போன்றவற்றைத் தெளிவாகப் பார்க்கலாம். கல்வி மற்றும் மொழிக் கொள்கைகள் அடிக்கடி சமத்துவமின்மை, தாய் மொழி மறுக்கப்பட்ட அலுவல் மொழி ‘நிர்ப்பந்தம்’ போன்றவற்றை உருவாக்கும், அது வெளிப்படையாக அல்லது கல்வியில் அதற்கான நேரம் எவ்வளவு ஒதுக்கப்படுகிறது மற்றும் தேவையான வளங்கள் என்ன என்பதன் அடிப்படையில் இருக்கும். எனவே, ஆதிக்க மொழிகள் சமமற்ற முறையில் தாய் மொழிகளுடன் அதிகாரம் மற்றும் அவமதிப்பு தொடர்புடையதாக இருப்பதால் (மேலும் அடிக்கடி பெரும்பான்மை மொழிகளை சிறுபான்மையினர் எவ்வாறு பேசுகின்றனர்) மெதுவாகச் செயல்படுவது முரண்பாட்டை அதிகப்படுத்தி சமூக சமத்துவமின்மையை விளைவிக்கிறது. அச்சு தோய்ந்த சமூகங்களில் (டிஜிட்டல் உட்பட) எழுத்து சார்ந்த மொழிக் கட்டுப்பாடு விதிவிலக்காக அமையக்கூடும், அதே போலத் தான் ஆதிக்க மொழிகளின் கற்றறிந்தவர்களின் பதிவுகளும் (கல்வி மொழி). எனவே, இவை எல்லாமே நியாயமற்ற மொழிக் கொள்கைகளால் ஏற்படும் முரண்பாட்டுச் சூழ்நிலைகளாகும். இரண்டாவது பிரதான வழி பயன்பாட்டில் இருக்கும் மொழியில் உள்ளது: வன்பேச்சுக்கள் போன்ற அவமதிப்பு அல்லது சில குழுக்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளும் தீங்கான பேச்சு. மொழி உரிமைகளைப் பாதுகாப்பதால் வறுமை மற்றும் சமத்துவமின்மை மூலம் மெதுவாகச் சமூகச் சீரழிவு ஏற்படுவதை மேற்கொள்ள முடியும், அதோடு ஒதுக்குதல் மற்றும் அந்நியப்படுத்துதல் போன்ற விரைவுச் செயல்பாட்டையும் தடுக்கலாம்.


மொழி உரிமைகள் மூலம் உயிர்களைக் காக்க உதவக்கூடிய வேறு வழிகள் உள்ளனவா?

மிகவும் ஏற்ற வழி என்றால் இடர் நிறைந்த காலம், சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் காலங்கள் என்று சொல்லலாம். மக்களுக்குத் தெரிந்த மொழிகளில் சுகாதாரம் சார்ந்த தகவல்களை வழங்குதல், மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்புத் தகவல்கள் தெரிந்த மொழிகளில் கிடைப்பது (புயல் காலங்கள் அல்லது நோய்ப்பரவல் தடுப்பு போன்ற காலங்களில்). இந்த அனைத்து சூழ்நிலைகளிலும், மக்கள் அனைவரையும் சமமாகப் பாதிக்கும் விஷயங்களைத் தான் பார்க்கிறோம் (‘நோய்கள் பாகுபாடு பார்ப்பதில்லை’ போன்ற வாக்கியங்கள்). மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள், சேவைகள் ஆகியவற்றைப் பொருத்துதான் எதிர்வினையாற்றுகிறார்கள், பாதுகாப்பைப் பெறுகிறார்கள். பெரும்பாலும் இவை சமூகப் பொருளாதாரம் சார்ந்தவையாக இருந்தாலும், அவை கலாச்சாரம் மற்றும் மொழியியல் சார்ந்தும் இருக்கின்றன. சமுதாயங்கள் எப்படி பிரிக்கப்பட்டிருக்கின்றனவோ, அப்படியே குழுக்களும் நோய் மற்றும் பேரிடர்களை வெவ்வேறு வகையில் அனுபவிக்கின்றன.


இந்தத் தலைப்பைக் குறித்து வாசிக்க அல்லது பார்க்க ஏதேனும் சில பரிந்துரைகளை வழங்க முடியுமா?

இந்தப் பணி யதார்த்தமானது மற்றும் ஆழமானது. மொழி சார்ந்த வேறுபாடுகளுக்கு ஏற்ற தயார்ப்படுத்தலுக்கு பல ஆவணங்களையும் பரிந்துரைகள்/நடைமுறைகளை யுனிசெஃப் மற்றும் யுனஸ்கோ வழங்கியுள்ளது. இவற்றைத் தேசிய அரசாங்கங்கள் அடிக்கடி பின்பற்றுவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, மூத்த ரேடியோ பேச்சாளர் (பிரபலமான ‘முற்போக்கான’ நபர்) ஆஸ்திரேலிய தேசிய ஒலிபரப்பில், வியட்நாமியர்களைப் பற்றியும் பிற சமுதாய மொழிச் செய்திகளைப் பற்றியும் மிகவும் கேவலமான கேலிகளைப் பேசினார், அப்போது விக்டோரியா மாகாணத்தில் கடும் அவசரநிலை நிலவிக் கொண்டிருந்தது. அதை எதிர்த்து நானும் என் சகப்பணியாளரும் ஒரு கடிதம் எழுதினோம். கோவிட் அவசரகாலத்தின்போது சிறுபான்மை சமூகங்களுக்கு எவ்வளவு அஜாக்கிரதையாக வசதி வழங்கப்பட்டது என்பதைப் பார்த்தோம்.


தற்போது, ஆஸ்திரேலியாவிலும் அப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளிலும் மொழி உரிமைகள் கருத்துகள் மற்றும் நடைமுறைகள் எவ்வாறு இருக்கின்றன? அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றனவா இல்லையா?


மொழி உரிமைகளை (அரசாங்கங்கள் இந்தச் சொல்லைப் பயன்படுத்தாமல் இருந்தாலும்) அங்கீகரிப்பதில் முடிவு சார்ந்த நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது ஆனால் ஆஸ்திரேலியாவில் 1970கள் மற்றும் 1980களில் பன்முகக் கலாச்சாரம் அதன் உச்சத்தில் மேலும் சிறப்பாக இருந்தது. அப்போது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தாலும் (எப்போதாவது பிரச்சனைக்குறியதாக) நடைமுறையில் சுகாதாரம் மற்றும் சட்ட அமைப்புகளில் பலனளித்துக் கொண்டும், பள்ளிகளில் மொழிக் கல்வி வழங்கப்பட்டும் இருந்தது. நம்பத்தகுந்ததாகவும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருந்தது. ஆசியா பசிபிக் பகுதிகளில் கல்வியில் மொழி உரிமைகளுக்காகப் பணிபுரியும் பாங்காக்கை மையமாகக் கொண்ட யுனஸ்கோ/யுனிசெஃப் அமைப்புகளால் நடத்தப்படும் ஒரு குழுவில் இடம்பெற்றுள்ளேன். சில பகுதிகளில் அங்கு நல்ல முன்னேற்றம் இருக்கிறது (இந்த ஆண்டு வெளியாகும் ஒரு நூல் இதைக் குறித்து ஆவணப்படுத்துகிறது) ஐநா அளவிலும் சிறுபான்மை மக்களுக்கான மொழி உரிமைகள் பெரிதும் கவனம் பெருகின்றன. இது நல்ல விஷயம் தான். ஆனால் பெரும்பாலான நடவடிக்கைகள் அரசாங்க அமைப்புகளுக்குள் நிகழ்கின்றன, இவை சிறுபான்மைக் குழுக்களின் கட்டமைப்பை வரம்பிடுவதோடு உரிமைகளின் முழு அங்கீகாரத்துக்கான சாத்தியங்களைத் தடுக்கின்றன. அதிகபட்ச ஒடுக்குமுறை ஏற்படும் நிலைகளில், எப்படிப்பட்ட விழிப்புணர்வு இருந்தாலும் சிறிய அளவிலான திருப்தியின்மை இருந்தாலும் அது குறுக்கிட்டுக் கவனிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. சிறிய செயல்பாடுகள் பலனளிப்பதில்லை என்கிற பார்வையை நான் மறுக்கிறேன்.


சில விஷயங்களில், நாங்கள் முன்னெடுக்கும் பேச்சு வார்த்தைகள் கொள்கை நடவடிக்கைக்கு உள்ளூர் சமூகங்களைப் பயிற்றுவிப்பதில் கவனம் செலுத்தியிருக்கின்றன. ‘கொள்கை அதிகாரங்கள் குறுக்கிடும்போது எப்படி கணித்து எதிர்ப்பது’, ‘உள்ளே நுழைந்து எப்படி எதிர்ப்புகளைத் தவிர்ப்பது’ போன்றவை. ஆதிக்கம் செலுத்துவோரால் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். மொழிக் கொள்கை எழுதுவதில் இதை முதற்கட்டமாகப் பார்க்கிறேன். சிறுபான்மையாக்கப்பட்ட மற்றும் ஆதிக்கமற்ற மொழியாக தரம்தாழ்த்தப்பட்டிருக்கும் மொழி எப்படி மொழித் திட்டமிடலைத் தொடங்கி எல்லா களங்களிலும் முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொள்கையை எவ்வாறு எழுதுவது, பிறருடன் எவ்வாறு தொடங்குவது போன்ற உங்கள் மொழிக்கான விளக்கத்தை நடைமுறைப்படுத்துவது (அல்லது எழுத்து முறை அல்லது இலக்கியம், அல்லது ‘வழக்கு’) மற்றும் மாற்றத்துக்கான முன்னேற்றப் போக்காக இதை எண்ணத் தொடங்குவது, என்பவை கற்றுக்கொடுக்கப்பட்டு கற்கப்பட வேண்டியதாகும். நடைமுறையில், கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும், சிறுபான்மை மொழிகளை மதிப்பதற்கான இயக்கத்தைப் பார்க்கிறோம், சிறுபான்மை குழந்தைகளின் பேச்சு வடிவங்களில் தொய்வு ஏற்படுவதை மறுத்து, சுகாதாரம் மற்றும் பேரிடருக்குத் தயாராவதில் மொழி மற்றும் தகவல் பரிமாற்றத்தைச் சேர்த்து, ஆதிக்க மொழிகளில் அதிகாரப்பூர்வக் கொள்கைகள் பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். எனவே, மொழி உரிமைகளை நோக்கிய சிறிய முன்னேற்றம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


70 views0 comments

Comments


bottom of page